கிழக்கு-மேற்கு ரயில் வழித்தடத்தில் நேற்றுக் காலை சுமார் 7 மணிக்கு ஏற்பட்ட ரயில் கோளாறு காரணமாக ஜூ கூன் செல்லும் வழியில், குவீன்ஸ்டவுன் நிலையம் முதல் ஜூரோங் ஈஸ்ட் நிலையம் வரை ரயில் சேவை தாமதமடைந்தது. சேவைகள் 1 மணி நேரம் கழித்து காலை சுமார் 8.20 மணிக்கு வழக்க நிலைக்குத் திரும்பின. ரயில் சேவை தாமதம் அடைந்தது பற்றி எஸ்எம்ஆர்டி நிறுவனம் காலை 7.01 மணிக்கு டுவிட்டரில் குறிப்பிட்டது. குவீன்ஸ்டவுன் நிலையம் முதல் ஜூரோங் ஈஸ்ட் வரை செல்வதற்கு கூடுதலாக 20 நிமிடம் பிடிக்கும் என்று அந்தச் செய்தி தெரிவித்தது.
மூன்று நாட்களில் இரண்டாவது ரயில் சேவை தாமதம். படம்: ஸ்டோம்ப்

