சிங்கப்பூரில் குடியிருப்பாளர்களின் தேவைகள் புதிய பரிணாமங்களைக் கண்டு வருகின்றன. நகர மன்றங்களின் வசதிகளைப் புதுப்புது புத்தாக்கங்களோடும் நீக்குப் போக்கான முறைகளிலும் பயன் படுத்திக்கொண்டால் அதன்மூலம் மக்களின் புதிய தேவைகளை நிறைவேற்ற முடியும் என்று கலாசார, சமூக இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித் துள்ளார். அமைச்சர் நேற்று பொங்கோல் வெஸ்ட் பகுதிக்கு வருகையளித் தார். அதற்குப் பிறகு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
பொங்கோல் வெஸ்ட் சிங்கப் பூரின் புதிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. அங்கு வசிக்கும் இளம் தம்பதிகளும் இளம் குடும் பத்தினரும் அதிகம். நகரத்தின் வசதிகளைப் புதிய முறைகளிலும் நீக்குப்போக்குடனும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு 'கொள்கல நூலகம்' ஒன்றை எடுத்துக்காட்டாக அமைச்சர் குறிப்பிட்டார். அந்த நூலகத்தை திருவாட்டி கிரேஸ் ஃபூ அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
அந்த நூலகத்தில் 3,000 புத்தகங்கள் உள்ளன. பொங்கோல் வெஸ்ட்டில் வரும் 2020 ஆவது ஆண்டு வாக்கில் நிரந்தர நூலகம் ஒன்று கட்டப்படும். அதுவரையில் ஒரு கொள்கலன் தற்காலிக நூலக இடமாகச் செயல் படும். பாலர் பள்ளிப் பிள்ளைகள் விளையாடுவதற்கு இப்போது பயன்படும் வசிப்போர் குழு நிலை யங்கள் மற்றோர் எடுத்துக்காட்டு என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

