அண்மையில் தீயில் கருகிய ஜூரோங் வெஸ்ட் ஈரச் சந்தை மற்றும் காப்பிக்கடை உரிமையாளர்களுக்குத் தற்காலிக இடத்தில் தங்களின் தொழிலைத் தொடர உதவும் பொருட்டு நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகச் சந்தை அடுத்தாண்டு சீனப் புத்தாண்டுக் குள் தயாராகி விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தத் தற்காலிக இடத்தைக் கட்ட சுமார் $600,000 தேவைப் படுகிறது. இதுவரை $280,000 நன்கொடையாக திரட்டப்பட்டுள் ளது. அதில் $80,000ஐ கோயில் கள், குலவழிச் சங்கங்கள், இதர அமைப்புகள் வழங்கின.
எஞ்சிய தொகையான $200,000ஐ பத்து வர்த்தகர்கள் வழங்கினர் என்று சந்தை கட்டட நிதிக் குழுத் தலைவர் ஹென்றி ஹோ நேற்று தெரிவித்தார். திரு ஹென்றி ஜூரோங் செண்ட்ரல் குடிமக்கள் ஆலோசனைக் குழுத் தலைவராகவும் இருக்கிறார். நேற்று நடைபெற்ற வேலைச் சந்தையில் அவர் கலந்துகொண்டு பேசியபோது இந்த விவரங்களைக் கூறினார். தீச்சம்பவத்தால், 51 கடை உரிமையாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தொழிலை இழந்தனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு வேலைச் சந்தைக்கு ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது.
மக்கள் கழகமும் வேலை வாய்ப்பு, வேலைத்திறன் பயிற்சிக் கழகமும் இணைந்து இந்த வேலைச் சந்தைக்கு ஏற்பாடு செய்திருந்தன. பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் தற்காலிக அல் லது நிரந்தர வேலைகளைத் தேட இந்த வேலைச் சந்தை உதவியது. ஜூரோங் செண்ட்ரல் வட்டாரத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் வேலைச் சந்தையில் கலந்து கொண்டனர்.

