நேரத்தைச் சேமிக்கும் 'சாயமடிக்கும் எந்திரன்'

நேரத்தைச் சேமிக்கும் 'சாயமடிக்கும் எந்திரன்'

1 mins read

எளி­தா­க­வும் வேக­மா­க­வும் பாது­காப்­பா­க­வும் சுவர்­களுக்­குச் சாயம் பூச புதிய மனித இயந்­தி­ரத்தை நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழக எந்திரனியல் ஆய்வு மையத்­தின் அறி­வி­யல் நிபு­ணர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர். 'பிக்­டோ­பாட் (Pi­c­t­o­B­ot)' என்ற இந்த எந்திரன், இரு மனி­தர்­கள் செய்வதைவிட 25% வேகமாக உய­ர­மான சுவர்­களுக்கும் சாயம் அடிக்­கக்கூடிய திறன் பெற்றது. உதா­ர­ணத்­துக்கு, வழக்­க­மாக 90 சதுர மீட்டர் சுவ­ருக்கு இரண்டு பேர் சாயம் அடிக்க ஒன்றரை மணி நேரத்­துக்­கும் அதி­க­மாக ஆகும். ஆனால் 1.5 டன் எடை கொண்ட இந்த எந்திரன், சாயம் நிரப்­பப்­பட்டு, 12 மின்கலங்­களும் பொருத்தப்­பட்­டி­ருந்தால் ஒரு மணி நேரத்­தில் ஒற்றை ஆளாக அந்தச் சுவ­ருக்கு சாயம் அடித்து முடித்து விடும்.

'ஆப்­டி­கல் கேமரா', 'லேசர் ஸ்கேனர்' ஆகியவை பொருத்­தப்­பட்ட இந்த எந்திரன், சுற்­றுச்­சூ­ழலை ஆராய்­வ­து­டன் 10 மீட்டர் வரை உயரம் கொண்ட சுவர்களுக்கும் சாயம் அடிக்­கக்­கூ­டி­யது. இதற்கு உதவி­யாக அதற்­கென்று ஆறு இயந்­தி­ரக் கைகளும் உயரே எழும்பக்­கூ­டிய தானி­யக்க மேடையும் உள்ளன.