'நச்சுநிரல்களால் பாதிக்கப்பட்ட சாதனங்களே காரணம்'

'நச்சுநிரல்களால் பாதிக்கப்பட்ட சாதனங்களே காரணம்'

1 mins read

கடந்த சனிக்கிழமையும் திங்கட் கிழமையும் ஸ்டார்ஹப் அகண்ட அலைவரிசையின் இணைய சேவைத் தடங்கல்களுக்கு நச்சு நிரல்களால் பாதிக்கப்பட்ட கருவி களை வாடிக்கையாளர்கள் பயன் படுத்தியதே காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த இரு நாட்களிலும் அந்நிறுவனத்தின் அகண்ட அலை வரிசை சேவையைப் பயன்படுத்து வோரில் பலரால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு இணையத்தில் உலவ முடியவில்லை.

இதையடுத்து, நேற்று நடை பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஸ்டார்ஹப் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி மொக் பக் லாம், "இணையப் பாதுகாப்பு என்பது தொலைத்தொடர்பு நிறு வனங்களின், அரசாங்கத்தின், சேவை வழங்குநர்களின் பொறுப்பு மட்டுமல்ல. அதைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கடமையும்கூட," என்று வலியுறுத்தினார்.

நச்சுநிரல்களால் பாதிக்கப்பட்ட 'வெப் கேம்' அல்லது 'ரூட்டர்' போன்ற சாதனங்களை வாடிக்கை யாளர்கள் வாங்கியிருக்கக்கூடும் என்றும் அதன்மூலம் இணைய சேவைத் தடங்கல் ஏற்பட்டிருக்க லாம் என்றும் திரு லாம் சொன் னார். அதனால், நம்பிக்கைக்குரிய விற்பனையாளர்களிடமிருந்து அத் தகைய சாதனங்களை வாங்குமா றும் வாடிக்கையாளர்களை அவர் அறிவுறுத்தினார். இதற்கிடையே, தொழில்நுட்பர்களை அனுப்பி, பாதிக்கப்பட்ட சாதனங்களைச் சரி செய்ய ஸ்டார்ஹப் திட்டமிட்டுள்ளது.