புதிய, தாதிமை இல்லங்கள், மனநல விடுதிக்கு அனுமதி

புதிய, தாதிமை இல்லங்கள், மனநல விடுதிக்கு அனுமதி

1 mins read
2400716e-45d8-4b66-9d46-c2aacadd83de
-

மனநோயாளிகள் நிவாரண உறைவிட இல்லம் ஒன்றை நடத்த சிங்கப்பூர் ஆங்கிலிக்கன் சமூகச் சேவை அமைப்பிற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருக்கிறது. செயிண்ட் ஆண்ட்ருஸ் மிஷன் மருத்துவ மனை மூன்று புதிய தாதிமை இல்லங்களை நிர்வகித்து நடத்த விருக்கிறது. இந்த இரு அமைப்புகளும் அறிக்கை ஒன்றில் இந்த விவரங் களைத் தெரிவித்தன. புதிய தாதிமை இல்லங்கள் ஹெண்டர்சன், குவீன்ஸ்டவுன் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும். இந்த இரு நிலையங்களும் 2017ல் செயல்படத் தொடங்கும்.

டோவர் அவென்யூவில் அமை யும் மூன்றாவது நிலையம் 2020ல் செயல்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இவை மூன்றும் ஒருங் கிணைந்த தங்குமிட இல்லப் பராமரிப்புச் சேவைகளை, சுகா தாரச் சேவைகளை வழங்கும்.

இந்த இரு அமைப்புகளின் தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் ஆர்தர் செர்ன், இந்த இரு அமைப்புகளும் தங்கள் 20 மையங்கள், நிலையங்களின் மூலம் 20,000க்கும் அதிக மக்களுக்குச் சமூக, சுகாதாரச் சேவைகளை வழங்கி வருவதாக தெரிவித்தார். இந்த இரு அமைப்புகளின் வருடாந்திர அறப்பணி விருந்து நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த விருந்தில் $607,000 திரட்டப்பட்டது.

சிங்கப்பூர் ஆங்லிக்கன் சமூகச் சேவை நிறுவனம் பல்வேறு சமூக, சுகாதாரச் சேவைகளை வழங்கி வருகிறது. மனநலப் பிரச்சினையிலிருந்து மீண்டு வருவோருக்கு உதவும் சேவையும் அவற்றில் உண்டு. படம்: ஆங்லிக்கன் சமூகச் சேவை நிறுவனம்