விபத்தில் இருவர் மரணம், ஒருவர் காயம்; ஓட்டுநர் கைது

விபத்தில் இருவர் மரணம், ஒருவர் காயம்; ஓட்டுநர் கைது

1 mins read
09d5382a-c464-4a2e-bee2-c23199e4157e
-

வெஸ்ட்­ கோஸ்ட் நெடுஞ்சாலை யில் பாண்டான் கிரசெண்ட் சாலைச் சந்­திப்­பில் நேற்று முன் தினம் நள்ளிரவுக்கு முன்னால் நிகழ்ந்த மோசமான விபத்தில் இருவர் மாண்டனர். மின் சைக்கிள்களில் மூவர் அவ்வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கனரக கொள்கலன் லாரி யுடன் அவர்கள் மோதினர். அதில் 25 வயது மின் சைக்கி ளோட்டி ஒருவர் சம்பவ இடத் திலேயே மாண்டார்.

இரவு 11.59 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படையினர் காயமுற்ற மேலும் இருவரை தேசிய பல்­கலைக்­க­ழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் 18 வயது மதிக்­கத்­தக்க மேலும் ஓர் ஆடவர் மரணமடைந்தார். மூன்றா­வது நபரான 17 வயது ஆடவர் காயங்களு­டன் தப்­பி னார். கவ­னக்­குறை­வால் மரணம் விளை­வித்த குற்றத்திற்­காக 34 வயது கனரக வாகன ஓட்­டு­நர் கைதானார். போலிஸ் விசா­ரணை தொடர்கிறது.

பாண்டான் கிரசெண்ட்டில் நிகழ்ந்த மோசமான விபத்தில் மின் சைக்கிளில் பயணம் செய்த மூவரில் இருவர் மரணமடைந்து விட்டனர்.