ஹவ்காங்கில் கல்லாப்பெட்டியே கடை நடத்துகிறது; மளிகைப்பொருட்கள் விற்பனை

ஹவ்காங்கில் கல்லாப்பெட்டியே கடை நடத்துகிறது; மளிகைப்பொருட்கள் விற்பனை

1 mins read

ஹவ்காங்கில் ஆளில்லாத மளி கைக்கடையில் மனித இயந் திரமே பொருட்களுக்கான பணத்தை வாங்கிக்கொண்டு கடை நடத்துகிறது. ஹவ்காங் ஸ்திரீட் 22ல் இருக்கும் புளோக் 242ல் உள்ள அந்தக் கடை அலெக்ஸ் சோங், 54, என்பவருக் குச் சொந்தமானது. அனுபவமே இல்லாமல் இவர் மளிகைக்கடை தொழிலில் 2015 ஜூனில் ஈடுபட்டார்.

சொந்தமாக மனித இயந்திர கல்லாப்பெட்டி ஒன்றை வடிவமைத்தார். அந்த இயந்திரமே கடையை நிர்வகித்து நடத்தி வருகிறது. அந்த இயந்திரம் மரத்தால் செய்யப்பட்டிருக்கிறது. அதில் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் இரும் பும் இருக்கின்றன. அதன் இரண்டு கண்களாக பிரத்தியேக படச் சாதனங்கள் உள்ளன. இந்தக் கடைக்குச் செல்வோர் பொருளை எடுத்து அதை கடையில் உள்ள 10 பிரத்தியேக படச்சாதனங்களில் எதில் வேண் டுமானாலும் காட்டலாம். பணத்தை அதில் உள்ள ஓர் இடத்தில் போட வேண்டும். அந்த இயந்திரத்தில் பொத்தானை அழுத்தினால் $1 ஆகவும் $0.10 ஆகவும் பாக்கி சில்லறையைப் பெற்றுக்கொள்ளலாம்.