நிறுவனத்தின் $1.53 மி. பணத்தை தன் கணக்குக்கு மாற்றிய மாது

நிறுவனத்தின் $1.53 மி. பணத்தை தன் கணக்குக்கு மாற்றிய மாது

1 mins read

'கனெட்சூ சிங்கப்பூர்' என்ற நிறுவனத்தில் கணக்கு உதவியாளராகப் பணியாற்றி வந்த குவா பீ எங், 44, என்ற மாது, ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில் பணத்தை மாற்றிவிடுவதற்கான 25 படிவங்களில் தில்லுமுல்லுகளைச் செய்து மொத்தம் $1.53 மில்லியன் தொகையைத் தன் முதலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து தன்னுடைய கணக்கிற்கு மாற்றிவிட்டார்.

அந்தப் பணம் அந்த மாதும் அவருடைய கணவரும் வங்கியில் வைத்திருந்த கூட்டுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. குவா பீ மீது 25 தில்லுமுல்லு குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் ஒன்பது குற்றச் சாட்டுகளின் பேரில் அந்த மாது நேற்று குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.