மன்னிப்புக் கேட்ட கோமாளி பூச்சாண்டி

மன்னிப்புக் கேட்ட கோமாளி பூச்சாண்டி

1 mins read
ae4da651-fcd9-4f00-9db2-fd2bc4292e4c
-

கொலைகார கோமாளி பூச்சாண்டி வேடம் போட்டுக் கொண்டு அலைந்த மாணவர் ஒருவர் தன் காரியத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இப்படி அவர் செய்த தற்குச் சமூக ஊடகங்களில் ஆதரவு எதுவும் கிடைக்க வில்லை. ஜோயெல் ஓங் என்ற இந்த 19 வயது மாணவர் திங்கட்கிழமை இரவு யுடியூபில் ஆறு நிமிடம் ஓடக்கூடிய காணொளி ஒன்றைப் பதிவேற்றினார்.

இந்த ஆடவர் வெள்ளை உடையில் கோமாளி போன்ற முகமூடியை அணிந்துகொண்டு சுரங்கப்பாதையில் போவோர் வருவோரைத் திடீர்திடீரென்று பயமுறுத்தியதை அந்தக் காணொளி காட்டியது. இதனையடுத்து தன் வீட்டிற்கு போலிஸ் வந்துவிட்டதாகவும் தன்னையும் இந்தக் கோமாளி காரியத்தில் தனக்கு உதவியாக இருந்த நண்பர் களையும் போலிஸ் விசாரித்ததாகவும் இவர் கூறினார்.

மன்னிப்புக் கேட்டுக்கொண்ட கோமாளி பூச்சாண்டி மாணவர். இவர் இணையப் பதிவேற்றங்களை அகற்றிவிட்டார். படம்: யுடியூப்