$82,000 மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல்: இரு மலேசியர்கள் கைது

$82,000 மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல்: இரு மலேசியர்கள் கைது

1 mins read
921fa7b2-e9fc-4876-974f-9e2ab9dfe4be
-

உட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடியைக் கடந்து போதைப் பொரு ளைக் கடத்த முயன்ற மலேசியர்கள் இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மோட்டார் சைக்கிளோட்டி, அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த மற்றொருவர் என 24 வயது நிரம்பிய இருவரும் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் சோதனைக் சாவடிக்குள் நுழைந்தபோது அங்குள்ள அதிகாரிகள் கூடுதல் சோதனைக்காக அவர் களை நிறுத்தினர்.

சோதனையின்போது அவர்கள் அமர்ந்திருந்த மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் இருக்கையின் கீழ் 360 கிராம் 'ஐஸ்', 2,999 எரிமின்=5 மாத்திரைகள், 260 எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் கூடுதல் விசாரணைக்காக ஒப்படைக்கப் பட்டுள்ளனர். சிங்கப்பூர் சட்டத்தின்படி 250 கிராம் 'ஐஸ்' போதைப் பொருளைக் கடத்துபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.