பணிப்பெண் ஒருவர் தமது முத லாளியின் கணவர் சாப்பிட முடி யாமல் மிச்சம் வைத்த உணவை கணவரின் வேண்டுகோளுக்கு இணங்க சாப்பிட்டார். இதை அறிந்த முதலாளி திரு வாட்டி ஸின்னீரா அப்துல் மஜீத் கரண்டியைக் அடுப்பில் காய வைத்து அந்தப் பணிப் பெண்ணின் முகத்தில் சூடு வைத்தார். மற்றோரு சந்தர்ப்பத்தில் பாத் திரங்களைக் கழுவும்போது கைதவறி ஒரு கோப்பை விழுந்து உடைந்ததால் அந்தப் பணிப் பெண்ணின் முதலாளியான மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அந்த மாது சூடான கரண்டியைக் கொண்டு பணிப்பெண்ணின் கைகளில் சூடு வைத்தார். இதுபோல் மேலும் பல கொடு மைகள் புரிந்த அந்த மாதுக்கு நேற்று மாவட்ட நீதிமன்றம் 20 மாதச் சிறைத் தண்டனை விதித் துத் தீர்ப்பளித்தது.
பணிப்பெண்ணுக்கு சூடு வைத்ததாக இரு குற்றச்சாட்டுகள், சைக்கிள் பூட்டால் அடித்த ஒரு குற்றச்சாட்டு என மூன்று குற்றச் சாட்டுகளை அந்த மாது ஒப்புக் கொண்டார். இவை தவிர மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்குமுன் கவனத்தில் எடுத் துக்கொள்ளப்பட்டன. மே து பியோ என்ற அந்த 23 வயது மியன்மார் நாட்டுப் பணிப் பெண், யீஷூன் அவென்யூ 4ல் உள்ள ஸின்னேரா குடும்பத்தில் 2015ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வேலைக்குச் சேர்ந்தார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதக் கடைசி வாக்கில் கோப்பையை உடைத்ததற்காக பணிப்பெண் ணுக்கு சூடு வைத்தார் ஸின் னேரா.
இந்தச் சமயத்தில் பொருட் களை வைத்து தள்ளும் வண்டி ஒன்றையும் மற்ற பொருட்களையும் சேதப்படுத்தியதற்காக சைக்கிள் பூட்டால் பணிப்பெண்ணின் கைகளை அந்த மாது தாக்கினார். பின்னர், அதே ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி கணவர் சாப்பிட முடியாமல் வைத்த மிச்ச உணவை பணிப் பெண்ணை சாப்பிடச் சொல்ல அதை சாப்பிட் டதற்காக ஸின்னேரா பணிப் பெண்ணின் முகத்தில் சூடு வைத் தார். இது நடந்த மூன்று நாட்கள் கழித்து அந்தப் பணிப்பெண் வீட்டை விட்டு ஓடினார். அவர் வேறோரு புளோக்கின் வெற்றுத் தளத்தில் துன்பத்தில் செய்வ தறி யாது இருப்பதைக் கண்ட பொது மக்களில் ஒருவர் போலிசுக்கு தகவல் கொடுத்தார். பணிப்பெண்ணுக்கு முகம், கைகள், தோள்பட்டைகள், ஆகிய வற்றில் தீக்காயங்கள் இருப்பது தெரியவந்தது.
பணிப்பெண்ணைக் கொடுமைப் படுத்திய ஸின்னீரா அப்துல் மஜீத். படம்: போலிஸ்

