போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்திய முன்னாள் தொழிலதிபருக்கு சிறை

போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்திய முன்னாள் தொழிலதிபருக்கு சிறை

1 mins read

வேறொருவரின் வெளிநாட்டுக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பயணம் செய்த குற்றத்திற்காக சீனத் தொழிலதிபரான மிக் டேவிசிக்கு நேற்று ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2007ல் சீனாவின் 70வது பணக்காரர் என்ற பெருமை பெற்ற அவர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்று சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். 56 வயதாகும் மிக் டேவிஸ் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். அவரின் முன்னாள் வர்த்தகப் பங்காளி ஒருவரின் புகாரின் பெயரில் மார்ச் மாதம் அவர் அங்கு கைதானர். அவரின் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று மாதம் அங்கு தங்கிய பிறகு அவர் கள்ளத்தனமாக வியட்நாமிற்குள் நுழைந்தார்.

அங்கு போலியான கடவுச் சீட்டு ஒன்றைச் சுமார் 11,336 வெள்ளிக்கு வாங்கினார். அந்த ஃபூ சிங் என்பவர் பெயரில் இருந்த ஹாங்காங் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்கு வர முற்பட்டார். ஜூலை 27ஆம் தேதி குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையக் கட்டடத்தில் அவர் கைதானர்.