5 குற்றங்களுக்கு 22 மாத சிறை

5 குற்றங்களுக்கு 22 மாத சிறை

1 mins read

பேருந்து ஓட்டுநருக்கு காயம் ஏற்படுத்தியது, ஆபாசமாக நடந்துகொண்டது, திருட்டு, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வரி செலுத்தாத சிகரெட்டு வைத்திருந்தது ஆகிய ஐந்து குற்றங்களுக்காக ஃபரிட் அப்துல் அசீஸ் என்ற 33 வயது ஆடவருக்கு 22 மாதம் 5 வாரம் நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், $40,000 அபராதமும் நான்கு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் முதல் செப்டம்பர் வரையில் வெவ்வேறு இடங்களில் அவர் புரிந்த குற்றங்களை நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.2016-11-04 06:00:00 +0800