தீ சம்பவம் நிகழ்ந்த சுங்கை காடுட் சரக்குக் கிடங்கு மூடல்

தீ சம்பவம் நிகழ்ந்த சுங்கை காடுட் சரக்குக் கிடங்கு மூடல்

1 mins read

தீ சம்ப­வம் நிகழ்ந்த சுங்கை காடுட்­டில் அமைந்­துள்ள மூன்று மாடி சரக்­குக் கிடங்கை மூடுமாறு கட்டட கட்­டு­மான ஆணையம் உத்­த­ர­விட்­டுள்­ளது. புதன்­கிழமை அதிகாலை அக்­கட்­ட­டத்­தில் பெரும் தீ மூண்டது. தீயில் எவருக்கும் பாதிப்பில்லை. கட்­டடத்­தின் ஒரு மாடி பகு­தி­யின் உலோக கூரை நெருப்­பினால் இடிந்­துள்­ளது சோதனை­யின் போது தெரி­ய­வந்தது என்று ஆணையம் கூறியது. கட்­ட­டத்­தின் மூன்று மாடி பகுதி உறு­தி­யான நிலையில் உள் ளது என்றும் பக்­கத்து கட்­ட­டங் களில் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை என்றும் ஆணையம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை குறிப்­பிட்­டது.

"பொதுமக்­களின் பாது­காப்­புக் கருதி, பாதிக்­கப்­பட்ட கட்­ட டத்தை மூடுமாறு கட்டட உரிமை­யா­ளரைக் கேட்­டுக்­கொண்டோம். நிபு­ணத்­து­வ பொறி­யா­ளாரை நிய­மித்து விரிவான சோதனை­களை மேற்­கொண்டு நிரந்த­ர­மான சீர்­தி­ருத்­தப் பணி­களுக்கு பரிந்­துரை ­களைப் பெறு­மா­றும் கூறி­யுள்­ளோம்," என்று ஆணையம் தெரி­வித்­தது. நிபு­ணத்­துவ பொறி­யா­ள­ரின் விரிவான சோதனை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு, தேவையான சீரமைப்­புப் பணிகள் செய்­யப்­படு வரை பாதிக்­கப்­பட்ட கட்­ட­டம் மூடப்­பட்­டி­ருக்­கும்," என்று ஆணையம் கூறியது.