ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்- அதிகம் பேர் படிக்கும் நாளிதழ்

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்- அதிகம் பேர் படிக்கும் நாளிதழ்

1 mins read

சிங்கப்பூரில் ஆக அதிகம் பேர் படிக்கும் ஆங்கில மொழி நாளி தழாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளே நீடிக்கிறது. சிங்கப்பூர் ஊடகம் பற்றிய ஆகப் புதிய நீல்சன் அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது. நீல்சன் நிறுவனம் 2015 ஜூலை மாதத்திற்கும் 2016 ஜூன் மாதத் திற்கும் இடையில் ஓர் ஆய்வை நடத்தி, சிங்கப்பூர் ஊடக அட்ட வணை அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. அந்த ஆய்வில் 15, அதற்கும் அதிக வயதுள்ள 4,660 சிங்கப் பூரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சிங்கப்பூரில் பெரியவர்களில் பத்தில் ஆறு பேர் செய்தித்தாள், இணையச் செய்திப்பதிப்புகளைப் படிக்கிறார்கள் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. இருவரில் ஒருவர் அதாவது 50.7% செய்தித்தாட்களைப் படிக் கிறார்கள். அன்றாடம் சராசரி அடிப்படையில் உள்ளூர் வாசகர் களில் 14.9% மின்னிலக்கச் செய்தித்தாட்களை (டிஜிட்டல்) வாசிக்கிறார்கள்.