'சலவைத் தொழிலில் உற்பத்தித்திறன்'

'சலவைத் தொழிலில் உற்பத்தித்திறன்'

1 mins read

ஊழியரணி வளர்ச்சி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து மெதுவ டையும் என்று எதிர்பார்க்கப்படுவ தால், சலவைத் தொழில்துறையில் உற்பத்தித்திறன் பெருக அரசாங் கம் உதவிக்கரம் நீட்டும் என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே தெரிவித்துள்ளார். அத்தொழில்துறையில் மனித வளத் தேவையைக் குறைப்பது உற்பத்தித்திறனைப் பெருக்கும் நடவடிக்கைகளில் முக்கியமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

'டெக்ஸ்கேர்' கருத்தரங்கில் நேற்று கலந்துகொண்டு பேசிய அவர், "தொழில்நுட்பத்தையும் தானியக்க முறையைப் பயன் படுத்தி வேலைகளைச் சுலபமாக, திறமையாக, பாதுகாப்பாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். உதாரணத்துக்கு, சில நிறுவ னங்கள் சலவைப் பொருட்களை துல்லியமாக அடையாளம் காண்ப தற்கு வானலை அதிர்வுச்சீர் அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை திரு லிம் சுட்டி னார்.