சுற்றுப்புறவியல் மன்றத்தின் மேலும் இரு ஊழியர்கள் பணி நீக்கம்

சுற்றுப்புறவியல் மன்றத்தின் மேலும் இரு ஊழியர்கள் பணி நீக்கம்

1 mins read

சிங்கப்பூர் சுற்றுப்புறவியல் மன்றத்தின் மேலும் இரு ஊழியர் கள் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் பணி நீக்கத்திற்கான காரணங்கள் விளக்கப்படவில்லை. மூன்று நாட்களுக்கு முன்தான் மன்றத்தின் முன்னாள் இயக்குநர் எட்வின் சியா பணி நீக்கம் தொடர்பான குற்றங் களிலிருந்து விடுவிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மன்றத்தின் அறநிதிப் பிரிவின் துணை இயக்குநர் ஜெரார்ட் கிறிஸ்டஃபரும் தொடர்புப் பிரிவின் இயக்குநர் ஷெர்லி சுவாவும் நேற்றுக் காலை பணி நீக்கம் செய்யப்பட்டனர்.