மின்னல் தாக்கி பங்களா வீட்டுக் கூரையில் தீப்பிடித்தது

மின்னல் தாக்கி பங்களா வீட்டுக் கூரையில் தீப்பிடித்தது

1 mins read
70ab1789-45b5-45f2-b2c2-0a6358f4f54f
-

கிளமெண்டி தனியார் குடியிருப்புப் பேட்டையில் அமைந்துள்ள இரண்டு மாடி பங்களா வீட்டை நேற்று முன்தினம் மின்னல் தாக்கிய தால் அதன் கூரையில் தீப்பிடித்துக் கொண்டது (படம்). நல்லவேளையாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் வீட்டின் உட்புறப் பகுதி கடுமையாகச் சேதமுற்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 9 சன்செட் பேலஸ் எனும் முகவரியில் அமைந்துள்ள அந்த வீட்டில் 80 வயது டாக்டர் பீட்டர் டான் அவரது மனைவியுடன் வசித்து வருவதாகச் சொல்லப்பட்டது. ஒரு கறுப்புப் பயணப்பெட்டியுடனும் ஓர் ஓவியத்துடனும் தான் வீட்டை விட்டு வெளியே வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் டாக்டர் டான் கூறினார்.