பொங்கோல் வாட்டர்வே டெரஸ்: போலி படம் குறித்து போலிஸ் புகார்

பொங்கோல் வாட்டர்வே டெரஸ்: போலி படம் குறித்து போலிஸ் புகார்

1 mins read
5f39458f-a739-41e2-b09f-265d6a17e586
-

தேவைக்கு ஏற்ப கட்டித்தரப்படும் வீடுகள் (பிடிஓ) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பொங்கோல் வாட்டர்வே டெரஸ் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் மாடிகள் இடிந்து விழுந்திருப்பது போன்ற போலி படம் (மேல் படம்) குறித்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் போலிசிடம் புகார் செய்துள்ளது. இந்தப் போலி படம் நேற்று இணையத்தில் வலம் வந்ததை அடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வலம் வந்த இந்தப் படம் போலியானது என்று கழகம் நேற்று மாலை 5.40 மணி அளவில் அதன் ஃபேஸ்புக் வாயிலாக உறுதி செய்தது.