பிரதமர் லீயின் செமராங் பயணம்

பிரதமர் லீயின் செமராங் பயணம்

1 mins read

சிங்கப்­பூர் - இந்­தோ­னீ­சிய தலைவர்களின் பொழுது­போக்கு சந்திப்பில் கலந்து­கொள்­ள பிரதமர் லீ சியன் லூங் இன்று இந்தோனீசியாவின் செம­ராங் நகருக்குப் புறப்படுகிறார். இந்­தோ­னீ­சிய அதிபர் ஜோக்கோ விடோ­டோ­வு­டன் பிர தமர் லீ கலந்­து­கொள்­ளும் முதலாவது தலை­வர்­கள் பொழு­து­போக்கு சந்திப்பு இது. இச்சந்­திப்­பின் போது, இருநாட்டு உற­வு­களின் மேம்பாடு பற்றி ஆராய்­வ­து­டன் இரு­த­ரப்பு ஒத்­துழைப்பை விரிவாக்­ க­வும் ஆழமாக்கவும் வழிகளை ஆரா­ய­ இரு தலை­வர்­களும் முனை­வார்கள்.

இந்த இரண்டு நாள் சந்­திப்­பில் இரு ­தலை­வர்­களின் முன்னிலை ­யில் மூன்று புரிந்துணர்வுக் குறிப்பு கள் கையெழுத்தாகும். மேலும் சிங்கப்பூரின் செம்ப்கார்ப் நிறுவன மும் இந்தோனீசிய நிறுவனம் ஒன் றும் இணைந்து உருவாக்கியுள்ள கெண்டால் தொழிற்பூங்காவை இரு தலைவர்களும் திறந்து வைப் பார்கள். பிரதமர் லீயுடன் அமைச்சர்கள் பலர் உடன் செல்கின்றனர்.