டான் செங் போக்: ஏமாற்றம்தான்; இருப்பினும்

டான் செங் போக்: ஏமாற்றம்தான்; இருப்பினும்

1 mins read
2ab2d9a7-affe-44c8-aa07-0ce7c8b4aca7
-

மக்கள் செயல் கட்சியின் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் ஒய்வுபெற்ற மருத்­து­வ­ருமான டாக்டர் டான் செங் போக் அடுத்த ஆண்டு நடை­பெ­றும் அதிபர் தேர்த­லில் பங்­கெ­டுக்க இய­லா­மல் போனது பற்றி தனது வருத்­தத்தை தெரி­வித்துள்ளார். சாய் சீ ரோட்டில் வசதி குறைந்த குடும்பங்களுக்காக நேற்று நடைபெற்ற அறநிதி நிகழ்ச்­சிக்­குப் பின் டாக்டர் டான் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசினார். "நான் ஏமாற்­றம் அடைந்­துள்ளேன் என்பதை மறுக்க இயலாது. வாழ்க்கை­யில் நாம் விரும்­பும் தெரிவு­கள் பல உள்ளன. நாம் ஒரு போ­தும் அவற்றை விட்­டுக்­கொடுப்­ ப­தில்லை," என்றார் அவர். சில மாற்­றங்கள் வர­வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்­டி­யிட எண்ணம் கொண்­டிருந்ததாக டாக்டர் டான் சொன்னார். - முழு விவரம் - அச்சுப் பிரதியில்