ரயில் சேவை தாமதம்

ரயில் சேவை தாமதம்

1 mins read

ஊட்ரம் பார்க் நிலையத்தில் நேற்றுக் காலையில் ஏற்பட்ட ரயில் கோளாறினால் வடக்கு=கிழக்கு ரயில் பாதையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சேவை தாமதமானது. மீண்டும் காலை 10.30 மணிக்கு சேவை முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. ரயில் பாதையில் ஏற்பட்ட தாமதம் குறித்து எஸ்பிஎஸ் டிரான்சிட் காலை 9.33 மணிக்கு டுவிட் செய்தது. மேலும் 15 நிமிடங்கள் தாமதம் ஆகலாம் என்றும் அது தெரிவித்தது.