55 வயதில் அடையாள அட்டை மறுபதிவு அவசியம்

55 வயதில் அடையாள அட்டை மறுபதிவு அவசியம்

1 mins read

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் 55 வயதை எட்டும்போது புதிய தேசியப் பதிவு அடையாள அட்டையைப் பெற வேண்டும். அடுத்த ஆண்டு முதல் இது நடப்புக்கு வருகிறது. தங்களது சொந்தத் தகவல் களையும் அண்மையில் எடுக்கப் பட்ட புகைப்படம் ஒன்றையும் அவர்கள் வழங்க வேண்டி யிருக்கும். அடையாள அட்டையைப் பெறும்போது அவர்களது கரு விழியின் புகைப்படங்கள் எடுக்கப் படும். கருவிழிப் படமானது புகைப் படம், பெருவிரல் ரேகை போன்று பாதுகாப்புச் சோதனைகளில் பயன் படுத்தப்படும். இந்தத் தகவல்களை நேற்று அறிவித்த குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் பழைய அடையாள அட்டை வைத்திருப் பவர்களது அடையாளத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் உதவும் என்றது.