அரும்பொருளகங்களுக்குச் சென்றவர்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது

அரும்பொருளகங்களுக்குச் சென்றவர்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது

1 mins read
2f5ffb25-fa49-4bdf-bea2-22fd127f69bf
-

தேசிய அரும்பொருளகங்களுக்கும் மரபுடைமை நிலையங்களுக்கும் வருகை புரிந்தவர்களின் எண் ணிக்கை கடந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவை எட்டியதாக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு தெரி வித்துள்ளது. கடந்த ஆண்டு தேசிய அரும் பொருளகங்களுக்கும் மரபுடைமை நிலையங்களுக்கும் சென்றவர் களின் எண்ணிக்கை 3,751,475ஐ தொட்டதாக அமைச்சு கூறியது. 2014ஆம் ஆண்டில் இவ்விடங் களுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையைவிட கடந்த ஆண்டு வருகை புரிந்தோரின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு மில்லியன் அதிகம்.

சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம், இந்திய மரபுடைமை நிலையம் ஆகியவை திறக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணம். பெரும்பாலான மரபுடைமை நிலையங்களில் வருகையாளர் களின் எண்ணிக்கை அதிகரித் தது.

சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம். கோப்புப்படம்