மூர்க்கமாக வாகனம் ஓட்டியது உட்பட ஆடவர் மீது 10 குற்றச்சாட்டுகள்

மூர்க்கமாக வாகனம் ஓட்டியது உட்பட ஆடவர் மீது 10 குற்றச்சாட்டுகள்

1 mins read

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மூர்க்கமாக வாகனத்தை ஓட்டியதாகவும் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கும் அந்த சைக்கிளில் பின் இருக்கையில் சென்ற பயணி ஒருவருக்கும் காயத்தை விளைவித்துவிட்டதாகக் கூறும் குற்றச்சாட்டு உட்பட இதர பல்வேறு குற்றங்களைச் செய்த தாகவும் 63 வயது ஆடவர் ஒருவர் மீது நேற்று நீதிமன்றத் தில் குற்றம் சுமத்தப்பட்டது. ஹோ லூங் சான் என்ற அந்த ஆடவர் மொத்தம் 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். குற்றச்செயல்கள் ஜூன் மாதம் 15ஆம் தேதி முற்பகல் 11.10 மணிக்கும் முற்பகல் 11.30 மணிக்கும் இடையில் நிகழ்ந்தது. ஹோ, டிசம்பர் 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார். .