அக்டோபர் ஏற்றுமதி மோசம், 12% குறைவு; டிரம்ப் வெற்றியால் மந்தம் ஏற்படும் அச்சம்

அக்டோபர் ஏற்றுமதி மோசம், 12% குறைவு; டிரம்ப் வெற்றியால் மந்தம் ஏற்படும் அச்சம்

1 mins read

சிங்கப்பூரின் ஏற்றுமதி அக்டோபர் மாதம் 12% குறைந்தன. எதிர்பார்க்கப்பட்டதைவிட இது மிகவும் குறைவு என்பது குறிப் பிடத்தக்கது. இந்தக் குறைவு செப்டம்பர் மாதம் 5% ஆக இருந்தது. ஐஈ சிங்கப்பூர் நிறுவனம் நேற்று வெளி யிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவந்தது. இந்த இறக்கம் ஏழு மாத காலத்தில் ஆக அதிக மான ஒன்று என்று தெரிகிறது. தொடர்ந்தாற்போல் இரண்டா வது மாதமாக ஏற்றுமதி குறைந்திருக்கின்றது. ராய்ட்டர்ஸ் நிறுவனம் பொருளியல் வல்லுநர் களை உள்ளடக்கி ஓர் ஆய்வை நடத்தியது. அவர்கள் அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 3.5% குறையும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் ஏற்றுமதி 12% குறைந்திருப்பது மிகவும் கவலை தருவதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.