போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக் கப்பட்ட இரண்டு ஆடவர்கள் நேற்று அதிகாலை சாங்கி சிறைச் சாலை வளாகத்தில், அவர்கள் செய்த குற்றங்களுக்காகத் தூக்கி லிடப்பட்டனர். அந்த இரண்டு பேரில் ஒருவர் நைஜீரியாவைச் சேர்ந்தவர். சிஜியோக் ஸ்டிபன் ஓபியோகா என்ற அந்த ஆடவருக்கு வயது 38. மலேசியாவைச் சேர்ந்த சுப்பிர மணியம் என்ற மறுபெயருள்ள தேவேந்திரன் என்பவர் தூக்கிலிடப் பட்ட மற்றொருவர்.
இவருக்கு வயது 31. மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஓர் அறிக்கையில் இவ்விவரங்களைத் தெரிவித்தது. காற்பந்து மன்றம் ஒன்றில் சேர் வதற்காக 2005ல் சிங்கப்பூருக்கு வந்த ஓபியோகாவை 2007 ஏப்ரல் மாதம் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்தார் கள். அவரிடமிருந்த ஒரு பையில் கஞ்சா போதைப்பொருள் இருந் தது.
அந்த ஆடவரின் வாடகை வீட்டில் பல்வேறு பைகளில் மேலும் போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். ஓபியோகா, 2,604.56 கிராம் கஞ்சாவைக் கடத்தியதால் குற்ற வாளி என்று தீர்மானிக்கப்பட்டார். கடந்த 2008 டிசம்பர் 30ஆம் தேதி அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. 500 கிராம் அல்லது அதற்கும் அதிக கஞ்சாவை யாராவது கடத் தினால் அவருக்கு மரணதண் டனை விதிக்க சிங்கப்பூர் சட்டத் தில் இடம் இருக்கிறது.

