மானபங்கம்: தினேஷ் ராஜலிங்கத்துக்கு 15 மாதம் சிறை, மூன்று பிரம்படி

மானபங்கம்: தினேஷ் ராஜலிங்கத்துக்கு 15 மாதம் சிறை, மூன்று பிரம்படி

1 mins read

ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததற்காக உணவக ஊழியர் ஒருவருக்கு 15 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. மூன்று பிரம்படிகள் கொடுக்கும்படியும் உத்தரவிடப் பட்டது. தினேஷ் ஏற்கெனவே நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டவர். இளம் குற்றவாளிகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டவர். கொள்ளையடித்து காயம் விளைவித்தது, மானபங்கம் ஆகியவை உள்ளிட்ட குற்றச்செயல்களுக்காக 19 வயதி லேயே தினேஷ் சீர்திருத்தப் பயிற்சிக்குச் சென்றவர் என்பதையெல்லாம் தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டினார். கருணை காட்டும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்ட தினேஷ், தான் செய்த காரியத்திற்காக மிகவும் வருந்துவ தாகத் தெரிவித்தார். "அன்று நான் குடிக்காமல் இருந்திருந் தால் அந்தத் தவற்றை நான் செய்திருக்க மாட்டேன்," என்று தினேஷ் மன்றத்தில் கூறினார்.