திமோர் லெஸ்டே நாட்டில் சுகா தாரச் சமூகச் செயல்திட்டம் ஒன்றை சிங்கப்பூரின் 'மெர்சி ரிலீஃப்' அமைப்பு சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சுடன் சேர்ந்து நிறைவேற்றுகிறது. அந்தத் திட்டம் அந்த நாட்டில் தண்ணீர், கழிவுநீர் வெளியேற்றம், துப்புரவு ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டிருக்கும். சிங்கப்பூரின் சுயேச்சையான முன்னணி பேரிடர் நிவாரண அமைப்பான மெர்சி ரிலீஃப், அமைச்சுடன் சேர்ந்து இந்த ஆண்டு முடிவில் அந்த ஆறுமாத கால திட்டத்தைத் தொடங்குகிறது. திமோர் லெஸ்டேவில் வசிக் கும் மக்களுடன் சேர்ந்து பாதுகாப் பான குடிநீர், சிறந்த கழிவுநீர் அகற்றும் வசதிகள், துப்புரவு ஆகியவற்றை அந்தத் திட்டம் சாதிக்கும்.
திமோர் லெஸ்டேவில் இந்தப் பையன்கள் ஒரு வண்டி மூலம் குடிநீரைக் கொண்டு வருகிறார்கள். படம்: மெர்சி ரிலீஃப்

