மலேசியாவின் சாலைப் போக்குவரத்துப் பிரிவில் உள்ள வாகன நுழைவுப் பதிவு முறை இயங்கவில்லை என்பதால் பதிவு செய்யப் படாத வாகனங்களும் இப் போதைக்கு மலேசியாவுக் குள் நுழையலாம் என்று அந்த இணையத் தளம் கூறுகிறது. கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் ஜோகூர் கடற் பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலம் ஆகிய வற்றின் மூலம் மலேசியா விற்குச் செல்லும் அனைத்து சிங்கப்பூர் வாகனங்களும் 'விஇபி' எனும் வாகன நுழைவு அனுமதிக்குப் பதிவு செய்திருக்க வேண் டும் என்ற விதி அமலா னது. அதன்படி, பதிவுக்குப் பிறகு சிங்கப்பூர் வாகனங் கள் ஒருமுறை பொருத் தப்படும் 'RFID' எனும் வானலை அடையாள மின் னுணுவியல் சில்லைக் காருக்குள் பொருத்த வேண் டும். அதற்குப் பத்து மலேசிய ரிங்கிட் கட்டணம் வசூலிக் கப்படுகிறது. அது ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லு படியாகும். இவ்வாண்டு ஜூலை வரை 144,000 வாகனங்கள் 'விஇபி' பதிவைச் செய்துள்ளன.
'விஇபி' பதிவு முறை இயங்கவில்லை; பதிவின்றியும் மலேசியா செல்லலாம்
1 mins read