தெம்பனிஸ் விரைவுச்சாலையில் கடந்த வியாழக் கிழமை காலையில் லாரியின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு தடங்களில் சறுக்கியபடி ஓட்டிய 24 வயது ஓட்டுநர் கைதானார். இந்தச் சாலை விபத்தில் ஒரு லாரியும் சிறிய பேருந்தும் சம்பந் தப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் ஒரு காருக்குள் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானது. அது சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அந்த லாரி வலது தடத்திலிருந்து திசை மாறி தடம் புரண்டு சறுக்கி ஒருவழியாக விரைவுச்சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தபடி நின்றது. படம்: ஃபேஸ்புக் காணொளி
அச்சுறுத்தும் வகையில் லாரி ஓட்டியவர் கைது
1 mins read

