'இஸ்கோஸ்' எனப்படும் லாப நோக்கமற்ற அமைப்பின் 60 பய னாளர்களில் திருவாட்டி கமாலி யாவும் ஒருவர். அவர் நேற்று அந்த அமைப்பு கரையோரப் பூந் தோட்டங்களில் நடத்திய கேளிக்கைச் சுற்றுலாவில் கலந்து கொண்டார். சுற்றுலாவுக்கு வந்திருந்த 40 பிள்ளைகள் ஏழு முதல் 12 வயதுடையவர்கள். அவர்களின் பெற்றோரில் குறைந்தது ஒருவர் சிறையில் உள்ளனர். 'ரிக்ருட்ஃபர்ஸ்ட்' எனும் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று இந்தச் சுற்று லாவை வழி நடத்தினர். அவர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் குற்ற வாளிகளின் பிள்ளைகளுக்கு நல்ல பண்புகள் பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.
ரிக்ருட்ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக உதவி அதிகாரிகளான டோரத்தி கீயும் (இடக்கோடி) பெல்லி வின்டும் முன்னாள் குற்றவாளி களின் பிள்ளைகளுக்கு கரையோரப் பூந்தோட்டங்களில் உள்ள மலர்கள் பற்றி விளக்கமளிக்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

