நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் தோ பாயோ குடியிருப்பாளர்களுக்கு இப்போது புதிதாக ஆறு கூடங்கள் வழி உதவி கிடைக்க இருக்கிறது. அந்தக் கூடங்களுக்கு வரும் சுகாதார வாகனங்கள் ரத்த அழுத் தத்தைக் கணக்கிடுவது போன்ற வற்றில் மக்களுக்கு உதவும். இந்த ஏற்பாடு வெற்றியடைந்தால் நாடு முழுவதும் இது நீட்டிக்கப் படும். சுகாதார துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று இதனை அறிவித்தார். குடியிருப்பாளர்களுக்கு உத வக்கூடிய இச்சமூகச் சுகாதாரக் கூடங்கள் நேற்று அதிகாரபூர்வ மாகத் தொடங்கப்பட்டன.
சுகாதார துணை அமைச்சர் சீ ஹொங் டாட், தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் உடல்நலப் பயிற்றுவிப்பாளரான திருவாட்டி சுவாவுடன் சேர்ந்து குடியிருப்பாளருக்குச் சுகாதாரத் தகவல்கள் பற்றி விளக்குகிறார். படம்: தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம்

