பிந்தான் தீவில் சனிக்கிழமை யன்று ஓட்டப்பந்தயம் ஒன்றில் கலந்துகொண்ட சிங்கப்பூரர் ஒருவர் இதயம் நின்றுவிட்டதை அடுத்து மரணமடைந்துவிட்ட தாக மீடியாகார்ப் தெரிவித்து உள்ளது. பிந்தானில் இரண்டு நாட் களுக்கு நடந்த அந்த ஓட்டப்பந் தயத்தில் 21 கிலோமீட்டர் தொலைவுக்கான தடையோட்டம் ஓர் அங்கமாக இருந்தது. அதில் சையது முகம்மது யூசோஃப், 37, என்ற சிங்கப்பூரர் கலந்துகொண்டார். பிந்தான் ஓட்டப்பந்தயத்தில் மிகவும் கடுமையான அங்கமாக இந்தத் தடையோட்டம் இருந்தது. நடுவில் சுவரை எல்லாம் ஏறிக் குதித்து ஓடவேண்டும். மொத்தம் 30 தடைகளைக் கடந்து ஓடி வெற்றிபெற வேண் டும். பாதியில் சிங்கப்பூரர் மயங்கிவிழுந்துவிட்டார். மருத்துவர்கள் அவருக்கு அவசர சிகிச்சை அளித்தார்கள். உள்ளூர் மருத்துவமனைக்கு மருத்துவ வாகனத்தில் அவரைக் கொண்டுசென்றார்கள்.
பிந்தான் தீவு ஓட்டப்பந்தயத்தில் தடையோட்டம் ஓடிய சிங்கப்பூரர் மரணம்
1 mins read

