ஆயுதம், மிரட்டல்; ஆடவர் கைது

ஆயுதம், மிரட்டல்; ஆடவர் கைது

1 mins read
ddddf9b3-1b53-4cc7-a003-9973bbf60f30
-

சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது, மிரட்டியது ஆகியவற்றுக்காக 23 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் கைது செய்துள்ளது. ஹவ்காங் அவென்யூ 3ல் சனிக்கிழமை காலை சுமார் 6.55 மணிக்குத் தனக்கும் அந்த ஆடவருக்கும் பிரச்சினை ஏற் பட்டதாகவும் அப்போது அந்த ஆடவர் துப்பாக்கி போன்று தெரிந்த ஓர் ஆயுதத்தைக் கொண்டு தன்னை மிரட்டியதாக வும் 24 வயது ஆடவர் ஒருவர் புகார் செய்ததாக போலிஸ் குறிப் பிட்டது. சந்தேகப்பேர்வழி பிறகு வாக னத்தில் அந்த இடத்தைவிட்டு போய்விட்டதாகவும் போலிஸ் அறிக்கை தெரிவித்தது. புகார் செய்யப்பட்ட ஒருமணி நேரத்தில் சந்தேக நபர் பிடிபட்டார் என்றும் அவரிடம் கத்தி, கைத்துப்பாக்கி உள்ளிட்ட பல பொருட்கள் கைப் பற்றப்பட்டதாகவும் போலிஸ் அறிக்கை தெரிவித்தது.

சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள். படம்: சிங்கப்பூர் போலிஸ்