கார் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் சிங்கப் பூரின் முயற்சியின் பயனாக பலர் சைக்கிளுக்கு மாறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மக்கள் கழகம், சிங்கப்பூர் சைக்கிள் சம்மேளனத் துடன் இணைந்து, பாதுகாப்பான சைக்கிள் ஓட்டத்தை ஊக்குவிக் கும் வகையில் 200 தொண்டூழி யர்களுக்குப் பயற்சி அளிக்க உள்ளது.
சைக்கிள் ஓட்டும்போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி இவர்கள் மக்களுக்குப் பயிற்சி அளிப்பர். சைக்கிள் பாதுகாப்புக் குறித்து இவர்கள் ஆறு மணி நேரம் பயிற்சி பெறுவர். சைக்கிள் ஓட்டும்போது எப்போதும் தலைக் கவசம் அணிவது, முழங்கால் வலி ஏற்படாமல் இருக்கும் வகை யில் சரியான முறையில் சைக்கிள் இருக்கையை வைத்தி ருப்பது போன்றவற்றை அவர்கள் இந்தப் பயிற்சியின்போது கற்றுக் கொள்வர்.

