போக்குவரத்து விளக்குகள் எரியவில்லை; இயோ சூ காங் ரோடு சாலை சந்திப்பில் ஒரே குழப்பம்

போக்குவரத்து விளக்குகள் எரியவில்லை; இயோ சூ காங் ரோடு சாலை சந்திப்பில் ஒரே குழப்பம்

1 mins read
239c3b9e-6f58-4dd8-b206-5d320f1f500a
-

இயோ சூ காங் ரோடும் அங் மோ கியோ அவென்யூ 5ம் சந்திக்கும் இடத்தில் நேற்று போக்குவரத்து விளக்குகள் திடீரென அணைந்து விட்டன. அப்போது கடும் மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் போக்குவரத்து தேக்கம் பெரிய அளவில் ஏற்பட்டது. அந்தச் சந்திப்பில் கார்களும் பேருந்துகளும் வெவ்வேறான திசைகளில் ஆமைபோல் நகர்ந்து கொண்டிருந்த காட்சி, குமாரி திலா அலி என்பவர் எடுத்திருந்த படங்களின் மூலம் தெரியவந்தது. அந்த மாது பேருந்து எண் 88ல் பிற்பகல் மணி 12.30 அளவில் பொங்கோலில் இருந்து தோ பாயோவுக்குச் சென்றுகொண் டிருந்தார். அப்பொழுது போக்கு வரத்து தடைப்பட்டது. முதலில் அவர் மழைதான் காரணமாக இருக்கும் என்று நினைத்தார்.

இயோ சூ காங் ரோடும் அங் மோ கியோ அவென்யூ 5ம் சந்திக்கும் இடத்தில் கடும் மழையில் போக்கு வரத்து விளக்கு கள் நின்று விட்டதால் குழப்பம் நிலவியது. படம்: வில்ஃபர்ட் லிம்