கோனி தீவு இயற்கைச் சுற்றுலாவில் சிங்கப்பூர் இளையர்களுடன் பங்கேற்ற வெளிநாட்டு ஊழியர்கள்

கோனி தீவு இயற்கைச் சுற்றுலாவில் சிங்கப்பூர் இளையர்களுடன் பங்கேற்ற வெளிநாட்டு ஊழியர்கள்

1 mins read
fe598083-cad7-4cd1-a3d9-b7af4a7bb8d3
-

முஹம்மது ஃபைரோஸ்

இந்திய ஊழியர் திரு சஞ்சீவ் குமார் சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகளாகப் பணிபுரிந்தாலும் சிங்கப்பூர் இளையர்களுடன் பேசிப் பழக அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் இம்மாதம் 13ஆம் தேதியன்று கோனி தீவில் அவ ருக்கு அந்த அனுபவம் கிட்டியது. "மாதத்தில் பெரும்பாலான நாட்கள் வேலையில் செலவாகின் றன. ஓய்வு நாட்களில் சக இந்திய நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்று உண்பதால் மற்றவர்க ளுடன் நான் பேசுவதில்லை," என் றார் வெஸ்ட் கோஸ்ட் கப்பற்பட்ட றையில் பராமரிப்புத் துறையில் பணியாற்றும் திரு சஞ்சீவ், 27. மாதத்தில் ஓரிரு நாட்களில் மட்டுமே அவருக்கு ஓய்வு கிடைக் கிறது. அவ்வாறு அந்த நாளை கோனி தீவில் 50 சிங்கப்பூர் இளையர்களுடன் பயனுள்ள வகை யில் அவர் செலவிட்டார்.

இளையர்கள் வெளிநாட்டு ஊழியர்களை நன்கு புரிந்து கொண்டு சிங்கப்பூருக்கு அவர் கள் ஆற்றும் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும் 'ஓபிஎஸ்' எனும் சிங்கப்பூர் வெளிப்புற சாகசப் பள்ளியைச் சேர்ந்த இளை யர்கள் சிலர் நாள் முழுவதும் கேளிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கோனி தீவு இயற்கைச் சுற்றுலாவுக்குப் பிறகு வழிகாட்டிகளாகச் சேவையாற்றிய சிங்கப்பூர் வெளிப்புற சாகசப் பள்ளியின் இளையர்களுடன் மகிழ்ச்சி பொங்கும் முகங்களுடன் காட்சியளிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். படம்: சிங்கப்பூர் வெளிப்புற சாகசப் பள்ளி