செல்லப் பிராணிப் பண்ணைகளுக்கும் விலங்கு நல்வாழ்வு அமைப்புகளுக்கும் புதிய இடவசதி

செல்லப் பிராணிப் பண்ணைகளுக்கும் விலங்கு நல்வாழ்வு அமைப்புகளுக்கும் புதிய இடவசதி

1 mins read
51dee145-21ad-439d-b5a0-15f22cbccd3b
-

லோயாங், சிலேத்தார் ஆகிய இடங்களில் இப்போது செயல்படும் விலங்கு நல்வாழ்வு அமைப்புகளும் செல்லப் பிராணிப் பண்ணைகளும் அவற்றின் குத்தகைகள் 2017 முடிவில் காலாவதியாகும்போது அந்த இடங்களைக் காலி செய்ய வேண்டியிருக்கும். அவற்றுக்குச் சுங்கை தெங்கா வில் புதிய இட வசதிகள் அமைக் கப்படும். அரசாங்கம் புதிய வசதி களை ஏற்படுத்தித்தரும். லோயாங், சிலேத்தார் ஆகிய பகுதிகளில் இந்த விலங்கு அமைப்புகள் இப்போது பயன்படுத் தும் இடங்கள் மறு மேம்பாட்டிற்கா கத் தேவைப்படுகின்றன. வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் நேற்று இந்த விவரங்களை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. விலங்கு நல்வாழ்வுக் குழுக் களும் செல்லப் பிராணிப் பண் ணைகளும் வேறு இடங்களில் செயல்பட ஏதுவாக அரசாங்கம் இட வசதிகளை அமைத்துக் கொடுத்து அவற்றை மாத வாட கையில் அந்த அமைப்புகளுக்கு குத்தகைக்குத் தரும்.

'வாய்சஸ் ஃபோர் எனிமல்ஸ்' அமைப்பில் உள்ள இந்த நாய்கள் அடுத்த ஆண்டு இறுதியில் புதிய காப்பகத்துக்குச் செல்லும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்