இவ்வாண்டின் இறுதி விற்பனையில் 10,000 புதிய வீவக வீடுகள்

இவ்வாண்டின் இறுதி விற்பனையில் 10,000 புதிய வீவக வீடுகள்

1 mins read
d1c91737-a024-471a-a443-134bfe4b13e9
-

இவ்வாண்டுக்கான இறுதிப் பகுதி வீடு களின் விற்பனை நேற்று தொடங்கிய போது வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 10,000க்கு மேற்பட்ட வீடுகளை விற் பனைக்கு விட்டது. அவற்றில் 5,110 வீடுகள் தேவைக் கேற்ப கட்டித்தரும் (பிடிஓ) வீடுகள். இதர 5,008 வீடுகள் முதிர்ச்சியடைந்த பேட்டைகளிலும் முதிர்ச்சியடையாத பேட்டைகளிலும் மேற்கொள்ளப்பட்ட முன்னைய வீட்டு விற்பனைகளில் விற்கப்படாத எஞ்சிய வீடுகளாகும். பிடிஓ வீடுகளில் பொங்கோலில் உள்ள மூன்று வீடமைப்புத் திட்டங்களுக் கான 2,194 வீடுகளும் அடங்கும் என்று கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது. அவற்றின் தொடக்க விலை, மானி யங்களுக்கு முன்பாக ஈரறை வீடுகளுக்கு $80,000 முதல் பல தலைமுறை வீடு களுக்கு $348,000 வரை தொடங்குகிறது.