ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியது, அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, 2016ஆம் ஆண்டில் உலகமயமாதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியலை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். உலகமயமாதலுக்கு எதிரான சம்பவங்கள் கிளப்பியுள்ள மன உளைச்சலைத் தவிர்த்து அரசாங் கங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வரும் வேளையில், வர்த்தகங்களும் தங் கள் நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐந்தாவது பொறுப் புள்ள வர்த்தகக் கருத்தரங்கில் அமைச்சர் உரையாற்றினார். "உலகமயமாதல் நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்து பொருளியலில் மேம்பட வாய்ப்பளிக்கும் அதே வேளையில், இப்படி இருந்தும் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்று சமூகத்தின் பெரிய அளவிலான மக்கள் கருதுகிறார்கள்.
உலகமயமாதல் தரும் நன்மை, தீமைகள் பற்றி அமைச்சர் வோங்
1 mins read

