பயனீட்டாளர் விலைக் குறியீடு தொடர்ந்து 24வது முறையாகக் கடந்த மாதம் சரிந்தது என்று புள்ளி விவரத்துறை நேற்று தெரி வித்தது. கடந்த மாதம் அந்தக் குறியீடு 0.1% சரிந்தது. அதற்கு முந்தைய மாதத்தில் அது 0.2% சரிந்தது என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் வெளியிட்ட கூட்டறிக் கையில் கூறப்பட்டது. எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை கடந்த மாதம் 3.7% வீழ்ச்சி கண்டன. ஒப்புநோக்க அதற்கு முந்தைய மாதத்தில் அது 8.4% ஆக இருந்தது. உணவு விலைகள் மிதமான சரிவைக் கண்டன. கடந்த மாதம் அந்த விகிதம் 1.9%, செப்டம்பர் மாதத்தில் அது 2.2% என்று அறிக்கை கூறுகிறது.
பயனீட்டாளர் விலைக் குறியீடு தொடர்ந்து சரிந்தது
1 mins read

