சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முன்னோடி அதிகாரியும் மீடியாகார்ப் வானொலி ஒலி 96.8ன் முன்னாள் தலைவருமான திரு ரா. புண்ணியமூர்த்தி, 62, நேற்று மாலை காலமானார். கடந்த சனிக்கிழமை கால்முட்டி அறுவை சிகிச்சைக்காக ஃபேரர் பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட திரு மூர்த்தி (படம்), வரும் சனிக்கிழமை அங்கிருந்து வீடு திரும்புவதாக இருந்தது. ஆனால் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் அவருக்குக் கடும் மாரடைப்பு ஏற்பட்டது. திரு மூர்த்திக்கு உடனடி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் அவர் மரணமடைந்தார். செய்தி: வீ. பழனிச்சாமி
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முன்னோடி அதிகாரி காலமானார்
1 mins read
-

