உலக வர்த்தகத்தில் நெருக்கடிகள்: சுதாரிக்கும் சிங்கப்பூர்

உலக வர்த்தகத்தில் நெருக்கடிகள்: சுதாரிக்கும் சிங்கப்பூர்

1 mins read

உலகமயத்திற்கு எதிரான போக்கு அதிகரித்து வருகிறது. தன்னைப்பேணித்தனம் அச்சம் கூடுகிறது. பொருளியல், வர்த்தகத்தில் நிச்சயமில்லாத போக்கு மேலும் தலையைத் தூக்குகிறது. இந்தச் சூழலில் 2009ல் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு படுமோசமான பொருளியல் நிலவரத்தை சிங்கப்பூர் எதிர்நோக்கக்கூடும் என்ற ஒரு நிலை ஏற்பட்டு வருகிறது. சிங்கப்பூர் அடுத்த ஆண்டில் தன்னுடைய பொருளியல் 3% வரை வளரும் என்று முன்னுரைக்கிறது. இந்த அளவு இந்த ஆண்டின் வளர்ச்சியை விட இரண்டு மடங்காகும்.