வாகனங்களை மீட்க சிங்கப்பூர் ஆயுதப் படை நடவடிக்கை

வாகனங்களை மீட்க சிங்கப்பூர் ஆயுதப் படை நடவடிக்கை

1 mins read
60739c54-3ff2-466d-b307-1833f6c390f2
-

சிங்கப்­பூர் தற்­காப்பு அமைச்­சின் ஒன்பது கவச வாக­னங்களை ஹாங்காங்­கி­லி­ருந்து கொண்டு வரும் பொறுப்பைப் பெற்ற 'ஏபிஅல்' கப்பல் நிறு­வ­னம் தற்போது ஹாங்காங் அதி­கா­ரி­களு­டன் இணைந்து செயல்­பட்டு வரு­வ­தாக தற்­காப்பு அமைச்சு நேற்று தகவல் வெளி­யிட்­டது. மேலும் இந்தப் பிரச்­சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு அமைச்­சின் அதி­கா­ரி­கள் அடங்­கிய குழு ஒன்று ஹாங்காங் சென்­றி­ருப்­ப­தாக அமைச்­சின் அறிக்கை கூறிப்­பிட்­டது.

வெளி­நாட்டுப் பயிற்­சிக்­காக பயன்­படுத்­தப்­பட்ட இந்த 9 'டெரெக்ஸ்' கவச வாக­னங்கள் ஹாங்காங்­கின் சுங்கத்­துறை­யால் நேற்று முன்­தி­னம் 'கவாய் சுங்' கொள்­க­லக் கப்பல் முனையத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டன. 'ஏபிஅல்' கப்பல் நிறு­வ­னம் அனைத்து கட்­டுப்­பாடு­களுக்­கும் இணங்க வேண்டும் என்றும் எடுத்­துச் செல்லும் அனைத்­து உப­க­ர­ணங்கள் பற்றிய தக­வல்­களை­யும் தெரி­விக்க வேண்டும் என்றும் தேவையான அனைத்து அனு­ம­திச் சீட்­டு­களை­யும் தயார்நிலையில் வைத்­தி­ருக்க வேண்டும் என்றும் அமைச்சு விளக்­கி­யது.