அரசாங்க ஊழியர்களுக்கு அரை மாத ஆண்டு இறுதி போனஸ் அடுத்த மாதம் கொடுக்கப்படும். குறைந்த சம்பளம் ஈட்டும் அதிகாரிகள் குறைந்தபட்சம் $900 பெறுவார்கள் என்று அரசாங்க சேவைப் பிரிவு நேற்று அறிவித்தது. அரசு ஊழியர்களுக்கு 2014, 2015ஆம் ஆண்டு முடிவில் முறையே 0.8 மாத, 0.65 மாத போனஸ் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு கொடுக்கப்படும் தொகை இவற்றைவிட குறைவு. இந்த ஆண்டு அரசாங்க ஊழியர் களுக்கு ஆண்டின் நடுப்பகுதியில் 0.45 மாதச் சம்பளம் வருடாந்திர மாறுவிகித ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இதையும் சேர்த்து இந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மொத்தம் 0.95 மாதச் சம்பளத்தை வருடாந்திர மாறுவிகித போனஸ் தொகையாகப் பெறுவார்கள்.
அரசு ஊழியருக்கு அரை மாதச் சம்பளம் ஆண்டு இறுதி போனசாக கிடைக்கும்
1 mins read

