சீனாவுடன் கொண்டிருக் கும் விரிவான, நீண்ட கால உறவை ஒரேயொரு சர்ச்சை தட்டிச் செல் வதை சிங்கப் பூர் அனுமதிக்காது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த உறவு பன்முகம் கொண்டது, பரஸ்பரமானது என்பதை இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் தெரிந்து வைத்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார். ரிட்ஸ்- கார்ல்டன் ஹோட்டலில் நேற்றுக் காலை நடைபெற்ற 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' உலக விவகாரக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய டாக்டர் விவியன், சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் அண்மையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகச் சொல்லப் படும் அம்சம் தொடர்பான வினாக் களுக்குப் பதிலளித்தார்.
கடந்த வாரம் ஹாங்காங்கின் சுங்கத்துறை அதிகாரி களால் பறிமுதல் செய்யப்பட்ட சிங்கப்பூர் கவச வாகனங்கள் தொடர்பான அம்சமும் அந்த வினாக்களில் அடங்கி இருந்தது. எந்தவோர் அம்சமும் சட்டத்திற்கு உட்பட்டு எவ்வாறு கவனத்துடனும் கண்டிப்புடனும் நடத்தப்பட வேண்டும் என் பதை கவச வாகனச் சம்பவம் உணர்த்தி இருப்பதாகச் சொன்ன அவர், "இது ஒன்றும் உத்திபூர்வ சம்பவம் அல்ல," என்றார்.

