சண்முகம்: பயங்கரவாத தாக்குதல் ஆபத்து அதிகரித்துள்ளது

சண்முகம்: பயங்கரவாத தாக்குதல் ஆபத்து அதிகரித்துள்ளது

1 mins read

விழாக்காலத்தில் தாக்குதல் நடக் கும் அபாயம் கடந்த ஆண்டைவிட அதிகம். ஏனெனில், தென்கிழக்கு ஆசியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் நம்பிக்கையுள்ளவர்கள் பரவி, வேர் கொண்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் கா.சண்முகம் எச்சரித்துள்ளார். மத்தியகிழக்கில் ஐஎஸ் நிலப் பரப்பை இழந்து, ராணுவ பின்னடை வினால் காயமடைந்து இருந்தாலும் அதன் சிந்தனைகளை வர வேற்கும், வளர்க்கக்கூடிய சிறு குழுவினர் இந்தப் பகுதிகளில் உள்ளனர். தொடர்ச்சியான சில நடவடிக்கைகள் வரவிருக்கும் ஆபத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கின்றன என்றார் அவர்.