வழக்கநிலையில் சிங்டெல் இணைய சேவை; 10% கட்டணம் தள்ளுபடி

வழக்கநிலையில் சிங்டெல் இணைய சேவை; 10% கட்டணம் தள்ளுபடி

1 mins read
a808c84c-c71b-4935-8f3f-60709a12756c
-

சிங்டெல் கண்ணாடியிழை அகண்ட அலைவரிசை இணைய சேவைகள் நேற்றுக் காலை 8.25 மணிக்கு வழக்க நிலைக்குத் திரும்பியதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. வாடிக்கையாளர்களுக்கான இம்மாத இணையப் பயனீட்டுக் கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், கையடக்கச் சாதனங்களில் சிங்டெல் சேவைகளைப் பயன்படுத்துவோர் கடந்த சனி, ஞாயிறு என இரு நாட்களுக்கான இணையப் பயனீட்டுக் கட்டணத்தைச் செலுத்தவேண்டியதில்லை என்று சிங்டெல் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் தலைவர் யுவென் குவான் மூன் தெரிவித்தார்.